ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மருமகன் மிகவும் கஞ்சத் தனம் உள்ளவர். எனது மகளுக்கும் இவருக்கும் எப்போதும் சண்டைச்சச்சரவுமாக உள்ளது. இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து சகல சௌபாக்கியங்கள் பெற்று வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், பெங்களூரு

DIN

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. அவருக்கு பாக்கியாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டுக்கதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றுள்ளதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அவருக்கு தற்சமயம் சுகாதிபதியின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும். உங்கள் மருமகனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசையில் லாபாதிபதியின் புக்தி நடப்பதால் செய்தொழிலில் படிப்படியாக நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT