ஜோதிட கேள்வி பதில்கள்

என்னுடைய மகளுக்கு நிரந்தரமான நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய வரன் அமையும்? செவ்வாய்தோஷமுள்ள வரனைத்தான் பார்க்க வேண்டுமா? பொருத்தமான நட்சத்திரங்கள் என்னென்ன? - வாசகி, விழுப்புரம்

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம். குடும்பாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகியோர் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். தற்சமயம் ஆட்சி பெற்றுள்ள பூர்வபுண்ணியாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பும் உண்டாகும். இந்த ஆண்டே அவர் மனதிற்குப்பிடித்த வேலை கிடைத்துவிடும்.செவ்வாய் தோஷம் இல்லை. தொழில் ஸ்தானம் வலுவாக உள்ளது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகப் பொருத்தம் அவசியம். களத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானாதிபதிக்கு முக்கியமாக சம தோஷம் அமைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT