ஜோதிட கேள்வி பதில்கள்

தந்தை இல்லாத என் பேத்திக்கு கல்வி நிலை எவ்வாறு உள்ளது? மேல் படிப்பு எந்த துறையில் சேர்ந்தால் பிரகாசிக்கும்? மருத்துவம் படிக்க விரும்புகிறாள். வாய்ப்பு உண்டா? வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதா? திருமண வாழ்க்கை நன்கு அமையுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், திருப்பூர்

DIN

உங்கள் பேத்திக்கு தனுசு லக்னம், மீன ராசி. லக்னத்திற்கும் கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரிய ஸ்தானம், அங்கு அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய புத்தி ஸ்தானாதிபதி மற்றும் பூர்வபுண்ணியம் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவான் ஆகியோரைப் பார்வை செய்கிறார். கல்விக்காரகரான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார். இன்னும் இரண்டாண்டுகள் கழித்து லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் லாபாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கும். அவருக்கு மருத்துவப் படிப்பு படித்து மருத்துவராக வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களால் இறுதிவரை ஆதரவு கிடைக்கும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட வேலையும் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும். களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் மணவாழ்க்கை சீராக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT