ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணமும் கைகூடவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. உடல் நலம் எப்போது சீராகும்? - வாசகர், விழுப்புரம்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மீன ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி லாப ஸ்தானத்திலும் பாக்கியாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதும் லாபாதிபதி லக்னத்தில் இருப்பதும் சிறப்பு. தைரிய ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதாலும் தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானின் தசை நடப்பதாலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வேலை, திருமணம் இரண்டும் எதிர்பார்த்தபடி கைகூடும். உடல் ஆரோக்கியமும் சீரடைந்துவிடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT