ஜோதிட கேள்வி பதில்கள்

33 வயதாகும் என் மகனுக்கு திருமணத்திற்கு சரியான பெண் அமையவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், அசோக்நகர்

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் லாபாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். தன பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்திலுள்ள செவ்வாய்பகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

SCROLL FOR NEXT