ஜோதிட கேள்வி பதில்கள்

இசைத்துறையில் பட்டம் பெற்றுள்ள நான் கல்லூரியில் இசைத்துறையில் ஆசிரியராக உள்ளேன். மேலும் நிரந்தர உத்தியோகமாக இல்லை. பல தேர்வுகள் எழுதியுள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? எப்போது சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்? வெளிநாட்டு வேலை அமையும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அமையுமா? எங்கள் குலதெய்வம் எது?  - வாசகர், மதுரை

DIN


உங்களுக்கு மேஷ லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று புதபகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தைப் பெறுகிறார். பாக்கிய ஸ்தானத்திற்கும், அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். ஆட்சி பெற்ற குருபகவானுடன் ராகுபகவான் இணைந்திருப்பதால் அஷ்டமகா நாகயோகம் உண்டாகிறது. தற்சமயம் குருமகாதசை நடப்பதால் அரசு இசை ஆசிரியர் வேலை கிடைக்கும். பகுதி நேரமாக கோயில்களிலும் வேலை பார்க்கும் யோகமும் உண்டாகும். வெளிநாடு சென்று வரும் யோகமும் இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு அமையும். மற்றபடி எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT