அரசு வேலை கிடைக்கும்
என் மகள் அரசு வேலைக்கு தேர்வாகி இரண்டாம் நிலைக்குச் செல்ல தாமதமாகிறது. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?
என் மகள் அரசு வேலைக்கு தேர்வாகி இரண்டாம் நிலைக்குச் செல்ல தாமதமாகிறது. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?
}வாசகர், துறையூர்.
உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் நான்காம் வீட்டுக்கதிபதியான புத பகவான் இரண்டாம் வீட்டில் சூரிய பகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானுடன் (குருமங்கள யோகம்) இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீடான தன் ஆட்சி வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிகிறது. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். இதனால் அரசு கிரகங்கள் வலுவாக உள்ளது என்று கூற வேண்டும். தற்சமயம் சூரிய பகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அரசு வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணமும் நடந்தேறும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபட்டு வரவும்.