ஜோதிட கேள்வி பதில்கள்

மகாலட்சுமியை வழிபடவும்

DIN


பிளஸ் 2 பயாலஜி குரூப்பில் படிக்கும் என் மகனுக்கு மருத்துவம் அல்லது பொறியியல், வேளாண்மை படிப்பில் எது ஏற்றது? அடிக்கடி உடல்நலம் பாதிப்படைகிறது. குணமடைய என்ன செய்ய வேண்டும்? 

-வாசகர், பொள்ளாச்சி. 

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம், நான்காமதிபதியான குருபகவான் எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தன் ஆட்சி வீடான நான்காம் வீடான கல்வி ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். எட்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவானின் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. ஐந்து மற்றும் பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், தர்மகர்மாதிபதிகள் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் ஜாதகத்திற்கு வலுவூட்டுகிறது. அதோடு ராகு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசை நடப்பதால் விவசாயப் படிப்பு அல்லது பொறியியல் படிப்பு ஏற்றதாக அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு உடல் நலம் சீரடைந்து விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT