வெளிநாட்டில் வசிக்கும் யோகம்!
எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். தற்சமயம் மறுமணத்திற்கு வாய்ப்புள்ளதா? சில காலம் கழித்து செய்யலாமா? என் வேலையில் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?
எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். தற்சமயம் மறுமணத்திற்கு வாய்ப்புள்ளதா? சில காலம் கழித்து செய்யலாமா? என் வேலையில் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?
வாசகி, சென்னை.
உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்றமர்ந்திருக்கிறார்.
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சிபெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
சுகாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம்பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. குடும்பாதிபதியான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் மூன்று, ஆறாம் வீட்டுக்கதிபதியான புத பகவானுடன் இணைந்திருக்கிறார்.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தற்சமயம் குரு மஹா தசையில் களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டு வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள, களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் உடைய வரன் அமைந்து திருமணம் கைகூடும். பன்னிரண்டாம் வீட்டில் பயணக் கிரகமான ராகு பகவானுடன் இணைந்திருக்கும் பாக்கியாதிபதியான குரு பகவான் ஆட்சி பெற்று தசையை நடத்துவதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். ஆஸ்திரேலியா போன்ற கிழக்கு நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறவும் வாய்ப்பு உள்ளது.
Advertisement