ஜோதிட கேள்வி பதில்கள்

எனது ஜாதகப்படி என் தொழிலில் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்?  -வாசகர், கொமாரபாளையம்

உங்களுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சனிபகவானுடன்

DIN

உங்களுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சனிபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கஜகேசரி யோகமும் முழுமையாக ஏற்படுகிறது. களத்திர, நட்பு, சுக ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தையும் பெற்றிருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவான் தனம், வாக்கு , குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து தன் மூலதிரிகோண வீடான துலாம் ராசியை பார்வை செய்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பது அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறது. அதோடு அவர் தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் செய்தொழிலில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண்பீர்கள். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT