ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகன் எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது? அரசு வேலை அமையுமா? தோஷம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?  -வாசகர், அரியலூர்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானுடனும் சூரியபகவானுடனும் இணைந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்ற சனிபகவானையும் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிமகா தசை முடியும் தருவாயில் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT