ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கும்  என் மூத்த சகோதரருக்கும் எப்போது திருமணம் நடைபெறும்? குடும்பப் பிரச்னைகள் எப்போது தீரும்?  - வாசகர், மதுரை

தினமணி



உங்களுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி,  திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆறாமதிபதியான சந்திரபகவானுடன் இணைந்திருக்கிறார். இவர்களை லக்னத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கும் குருபகவான் பார்வை செய்கிறார். அதோடு குருபகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும், பாக்கிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியான சனிபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். தைரிய, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசையில் சுக்கிர புக்தி இன்னும் மூன்றாண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் தகுதியான பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும்.

உங்கள் மூத்த சகோதரருக்கு தனுசு லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்றமர்ந்து அயன ஸ்தானத்தையும் குடும்ப ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெற்று, நவாம்சத்தில் ஆட்சி, உச்சம், மூலதிரிகோண ராசியான கன்னி ராசியை அடைகிறார். அதோடு களத்திர காரகரான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணமும் கைகூடும். உங்கள் குடும்பப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT