ஜோதிட கேள்வி பதில்கள்

என் மூத்த மகன் தொழில் நொடித்து வீட்டில் அமர்ந்திருக்கிறார். எப்பொழுது மறுபடியும் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவார். என் இளைய மகனுக்கு திருமணம், நிரந்தர தொழில் இரண்டும் எப்போது அமையும்? - வாசகி, காரைக்கால்

DIN


உங்கள் முதல் மகனுக்கு கடக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம். லக்னாதிபதி நவாம்சத்தில் நீச்சமடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான  செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானுடன் இணைந்து ஐந்தாம்  பார்வையாக தன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும்  தொழில் ஸ்தானாதிபதியையும்; ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும்; ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். களத்திர நட்பு ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான ஆயுள் காரகரான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிர புக்தி முடியும் தறுவாயில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் வாழ்க்கையில் மறுபடியும் மறுமலர்ச்சி உண்டாகத் தொடங்கும். சிறிது சிறிதாக அவர் செய்து வந்த தொழிலைச் செய்யத் துவங்குவார். 2022 -ஆம் ஆண்டு முடிந்தவுடன் கடன்கள் அடைந்து வாழ்க்கையில் பழைய நிலையை எட்டி விடுவார். 

உங்கள் இளைய மகனுக்கு துலாம் லக்னம், மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷபராசி. லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று , சனி, குரு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். சுக ஸ்தானத்தில் கேதுபகவானும் தொழில் ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள செவ்வாய்பகவானும் ராகுபகவானும் அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி சந்திரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் லாப ஸ்தானத்தில் புதஆதித்யர்கள் அமர்ந்திருப்பதும் சிறப்பு. இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அவருக்கு சனி மகா தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம், நிரந்தர வேலை ஆகிய இரண்டும் கிடைக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT