ஜோதிட கேள்வி பதில்கள்

மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புள்ளது

தினமணி

என் மகன் பிளஸ் 2 படிக்கிறார். மருத்துவராக ஆசைப்படுகிறார். மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளதா? நல்ல இடத்தில் திருமணம் நடக்குமா? உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படுகின்றன. அது எப்பொழுது தீரும்? எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. 

-வாசகர், கடலூர். 

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். லக்னாதிபதி மற்றும் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து இருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) உச்சம்பெற்று, ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும், அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக தன் ஆட்சி வீடான, மீன ராசியான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். 

சனி பகவான் ஆயுள் காரகராகி, ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தீர்க்காயுள் யோகம் என்று கூறவேண்டும். லக்னாதிபதி கல்வி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அவர் எதிர்பார்க்கும் மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. கல்வி காரகரான புத பகவான், சுக்கிர, ராகு பகவான்களுடனும், தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவானுடனும் இணைந்து, அவர்கள் மூவரும் சூரிய பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். 

இதனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்துவிடும். தற்சமயம் ராகு பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடக்கும். இந்த காலக் கட்டத்திற்குள் அவரின் உடல் உபாதைகளும் தீரத் தொடங்கிவிடும். அவரின் 26-ஆம் வயதுக்குப் பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக் இமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT