முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்

என் மகளுக்கு 2015-ஆம் ஆண்டு திருமணமாகி 2017-ஆம் ஆண்டு விவாகரத்தாகி விட்டது. எப்பொழுது மறுமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:


என் மகளுக்கு 2015-ஆம் ஆண்டு திருமணமாகி 2017-ஆம் ஆண்டு விவாகரத்தாகி விட்டது. எப்பொழுது மறுமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

வாசகி,  மாம்பலம்.

உங்கள் மகளுக்கு மீன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமாஸ் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானுடன் இணைந்து அவர்கள் இருவரும் நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சந்திர பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமும் ஆகும்) நவாம்சத்தில் மீன ராசியில் குருபகவானுடன் இணைந்திருக்கிறார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியபகவானுடன் இணைந்து அவர்கள் இருவரும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார்கள். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரியஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய, செவ்வாய் பகவான்களையும் பார்வை செய்கிறார்.

சுகஸ்தானமாக நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புகபகவான், நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து, தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். தற்சமயம் அவருக்கு புதபகவானின் தசை நடக்க தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த  நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து மறுமணம் நடக்கும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →