ஜோதிட கேள்வி பதில்கள்

விரும்பிய மாற்றம் கிடைக்கும் 

DIN


நான் நல்ல வேலையில் இருக்கிறேன். என்னை பாடியிலிருந்து ஒரகடத்திற்கு மாற்றி விட்டார்கள். என் உடல் ஆரோக்கியம் சரியாக இல்லாததால் ஒரகடம் சென்று வர முடியவில்லை. தற்சமயம் வீட்டில் இருக்கிறேன். மீண்டும் பாடிக்கு வேலை மாற்றம் எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? பரிகாரம் செய்ய வேண்டுமா?

வாசகர், பாடி.

உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னத்தில் ராகு பகவானும், களத்திர நட்பு ஸ்தானத்தில் குரு, சுக்கிர, கேது பகவான்களும் உள்ளார்கள். சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்தில் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றமர்ந்திருக்கிறார். அவருடன் உச்சம் பெற்றுள்ள குரு பகவானும், கேது பகவானும் இணைந்திருக்கிறார்கள். இதனால் சுக்கிர பகவானுக்கு கேந்திராதிபத்திய தோஷம் குறைகிறது. லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை முடியும் தருவாயில் உள்ளதால், இந்த ஆண்டே நீங்கள் மறுபடியும் பாடிக்கு வேலைக்கு செல்லத் தொடங்குவீர்கள். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்து விட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT