ஜோதிட கேள்வி பதில்கள்

பெருமாளையும் தாயாரையும் வழிபடவும்

DIN


எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவருமே  அரசுத் துறை வங்கியில் பணி புரிபவர்கள். மூத்த மகன் திருமணம் ஆனவர். இளைய மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் எப்போது நடக்கும். அவருக்கு தந்தை வகையில் பெண் அமையுமா? அல்லது தாய் வகையில் பெண் பார்க்கலாமா? 

-வாசகர், கோவை. 

உங்கள் இளைய மகனுக்கு சிம்ம லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் லக்னத்தில் லக்னாதிபதியான சூரிய பகவான் புத பகவானுடனும் (புத ஆதித்திய யோகம்) குரு பகவானுடனும் (சிவராஜயோகம்) சுக்கிர பகவானுடனும் இணைந்து இருக்கிறார்.

களத்திர நட்பு ஸ்தானத்தில் இருந்து சந்திர பகவான் சூரிய பகவானையும் (பெüர்ணமி யோகம்) குரு பகவானையும் (கஜகேசரி யோகம்) புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். சுக பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் உச்சம் பெறுகிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். 

தற்சமயம் புதன் பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி இன்னும் இரண்டு ஆண்டுகள் நடக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் தந்தை வழியில் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT