ஜோதிட கேள்வி பதில்கள்

வங்கி, காப்பீட்டுத் துறை ஏற்றது

DIN


என் மகனுக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? அவருக்கு எந்த ஆண்டு திருமணம் நடக்கும்? எந்தத் துறை ஏற்றது? பரிகாரம் கூறவும்! 

-வாசகர்.  

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானாதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றமர்ந்து சுக்கிர, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சனி பகவான் லக்னத்தில் அமர்ந்து களத்திர நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். 

பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சிபெற்று, அஷ்டமாதிபதியான சந்திர பகவானுடனும், களத்திர நட்பு ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

இதனால் முழுமையான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. ராகு பகவான் குடும்ப ஸ்தானத்திலிருந்து தற்சமயம் தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புத பகவானின் புக்தி நடக்க இருப்பதால் அடுத்த ஆண்டு தகுதிக்கேற்ற நல்ல வேலை வங்கி, காப்பீட்டுத் துறை போன்றவற்றில் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. புத பகவானின் புக்தி முடிவதற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT