முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மூத்த மகனுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்சமயம் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அங்கேயே நிரந்தர குடியுரிமை கிடைக்குமா? மகன், மருமகள் இருவரின் ஜாதகங்களும் அனுப்பியுள்ளேன். இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

அமெரிக்காவில் குடியுரிமை பெறுவார்கள்!
 என் மூத்த மகனுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்சமயம் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அங்கேயே நிரந்தர குடியுரிமை கிடைக்குமா? மகன், மருமகள் இருவரின் ஜாதகங்களும் அனுப்பியுள்ளேன். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?
 -வாசகி, பொன்னேரி.
 உங்கள் மகனுக்கு மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி குடும்பாதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
 தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் பாக்கியாதிபதியான புத பகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், ஏழாம் பார்வையாக பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
 தற்சமயம் குரு மஹாதசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் குழந்தை பாக்கியம் உண்டாகும். இருவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவார்கள். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments