ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேத்திக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்... ராகு, கேது தோஷம் பார்க்க வேண்டுமா...பரிகாரம் என்ன செய்ய வேண்டும்...  -பழனியப்பன், அம்பத்தூர்.

DIN

லாப ஸ்தானத்தில் சுக்கிரன்
 என் பேத்திக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்... ராகு, கேது தோஷம் பார்க்க வேண்டுமா...பரிகாரம் என்ன செய்ய வேண்டும்...
 -பழனியப்பன், அம்பத்தூர்.
 உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
 ஐந்தாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் திக் பலம் பெற்றமர்ந்து புத (புத ஆதித்ய யோகம்), சனி (சச மஹா யோகம்) பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
 பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று நவாம்சத்தில் உச்சம் அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், வர்கோத்தமம் பெற்ற புத பகவானையும், ஆட்சி பெற்றுள்ள சனி பகவானையும் பார்வை செய்கிறார்.
 குரு பகவானின் ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சர்ப்ப கிரகமான கேது பகவானின் மீதும் படிகிறது.
 களத்திர நட்பு ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சர்ப்ப தோஷம் குருபகவானின் பார்வையால் பாதி அளவுக்கு குறைந்து விட்டதால் சர்ப்ப தோஷம் உள்ள வரனையே பார்க்க வேண்டும் என்பது இல்லை.
 தற்சமயம் கேது பகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT