என் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். எப்பொழுது குணமாகும்? குரு தசை நன்மை செய்யுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

-வாசகி, தூத்துக்குடி.
உங்களுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று சூரிய, செவ்வாய் பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தன பாக்கியாதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சிபெற்று, உச்சம் பெற்றுள்ள லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இது ஒரு சிறப்பான இணைவு என்று கூறவேண்டும்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிர, சந்திர பகவான்களைப் பார்வை செய்வதும் சிறப்பாகும்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) பெற்றமர்ந்து, ஐந்தாம் பார்வையாக அயன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் குரு மஹா தசையில் சனி புக்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். அதற்குப் பிறகு தொடங்கும் லக்னாதிபதியின் புக்தியில் உங்கள் உடல்நலம் சீரடைந்து விடும்.
குரு மஹாதசை சிறப்பாகவே செல்லும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.