முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எப்பொழுது குணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

என் மகனுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எப்பொழுது குணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

என் மகனுக்கு படிப்புக்கேற்ற வேலை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எப்பொழுது குணமாகும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

-வாசகி, மதுரை. 

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சூரிய பகவானுடன் இணைந்து சிறப்பான புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். 
இரண்டு, ஒன்பதாமதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். 
பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீதும் படிகிறது. லாபாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். 
இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவரின் மன நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

முழு கட்டுரையைப் படிக்க →