எனக்கு 48 வயதாகிறது; இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
எனக்கு 48 வயதாகிறது; இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
எனக்கு 48 வயதாகிறது; இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வாசகர், சேலம்.
உங்களுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானாதிபதி சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.
சுக ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்திற்கும், அஷ்டம ஆயுள் புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவானுடன் இணைந்திருக்கிறார்.
தனாதிபதி, லாபாதிபதி குரு பகவான் அயன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று, ஐந்தாம் பார்வையாக நான்காம் வீட்டையும், ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், புத பகவானையும் பார்வை செய்கிறார். குரு பகவானின் ஒன்பதாம் பார்வை எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தைரிய, கர்மாதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் மூலத்திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
தற்சமயம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பாகும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.