ரிஷப ராசி 
ஜோதிட கட்டுரைகள்

ஓட்டமும் உழைப்பும் அதிகமுள்ளவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்!

ரிஷப ராசியினரின் குணாதிசயங்கள் பற்றி..

ஜோதிடர் பார்வதி தேவி

ஒரு குறிக்கோளில் செயல்படுத்தி, அவற்றில் வெற்றியை அடையும் கம்பீரமானவர்கள் ரிஷப ராசியினர். ஜாதக அலங்காரத்தில் - "ரிஷப லக்கினக்காரர்கள் சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க்கீழே வேலை செய்பவன், புளிப்பு பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம், பேராசை, இருமல், கபம், கழுத்தில் வியாதி இருக்கும், மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று நூலில் கூறப்படுகிறது.

ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் ‘எருது’ என்று பொருள். வானவெளியில் இந்த ராசியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பு எருதைப்போலத் தோற்றமளிக்கும். இந்த ராசியினர் காளை போன்று கண்முன் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் இவர்கள் ஓட்டமும் உழைப்பும் அதிகம். உழைப்புக்கு சனி முக்கிய காரணி, அதோடு அவரே ரிஷபத்திருக்கு நல்ல நண்பன், பாக்கியவான் மற்றும் தொழில்காரகன். காளைக்கு கோபம் வராது, வந்தால் தாங்க முடியாது. அதே குணம் இவர்களுக்கும் உண்டு. இவர்கள் கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், கடின தோல்கள், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்து வரிசையாகவும், நெற்றி அகன்றும், ஒரு சிலருக்கு முதுகு சிறிது வளைந்தும் இருப்பார்கள்.

கோச்சார சூரியன் வரும் காலம் வைகாசி மாதம் பிறக்கும். வேத ஜோதிடத்தில் சிவன் என்கிற சூரியன் எங்கே இருக்கிறாரோ அங்கு அருகாமையில் சக்தி என்கிற சந்திரன் இருப்பாள் என்பது சூட்சுமம். அறிவியல் ரீதியாக சந்திரன் ஒளி என்பது சூரியனிடமிருந்து பெறப்படுகிறது. சூரியன் மேஷத்தில் உச்சம் அதற்கருகில் உள்ள ரிஷபத்தில் சந்திரன் உச்சம். சூரியன் நட்சத்திரமான கிருத்திகை 2, 3, 4-ம் பாதங்கள், சந்திரன் பிடித்த ஆசைமிக்க அவரின் நட்சத்திரமான ரோகிணி மற்றும் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷம் 1,2 பாதங்களும் ரிஷபத்தில் அடங்கியுள்ளன.

இந்த காரகத்துவ அடிப்படையில் ரிஷப ராசியினர் தன்னோடு பெற்றோர், சகோதர, சகோதரி மற்றும் ரத்த சம்பந்தமான உறவினர்களுடன் அரவணைத்து கூட்டாக வாழ்வார்கள். ஒவ்வொரு கிரகமும் அவரவர் ஆட்சி பெற்ற வீட்டில் தான் மூலத்திரிகோணம் அடையும், ஆனால் ரிஷபத்தில் மனதைக் குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலத்திரிகோணம் பெரும் ஒரு முக்கிய பாவம். இங்கு ஒளிக் கதிர்களின் பலம் அதிகம் என்பது சூட்சும விதி. ரிஷப லக்னக்காரர்கள் மனதளவில் மிகவும் திடமானவர்கள் அதுவே இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணி. இந்த ராசிக்காரர்களின் மனதில் புதைந்த பல்வேறு மர்ம விஷயங்களை தன் நலத்திற்காகவும் மற்றும் பிற நலத்திற்காகவும் மறைத்து விடுவார்கள். இவர்கள் சுகத்தையும், சந்தோஷத்தையும் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுவார், அதற்காகவே தாங்கள் செய்யும் வேலையில் உழைப்பை அதிகம் போடுவார். ஜாதகரின் தாயின் ஆளுமையில் அவரின் வீடு இருக்கும். அதே சமயம் தயாருக்கு நோயால் ஒரு பெரிய பாதிப்பு உண்டாகும். இவை அனைத்தும் அவரவர் தசா புத்திக்கு ஏற்ப மாறுபடும்.

காலபுருஷனுக்கு 2வது பாவ கட்டம் ரிஷபம். சுகம் ஆடம்பரம் விரும்பியான சுக்கிரன் இங்கு ஆட்சி. அவரே 5ல் நீச்சமும், 11ல் உச்சம் பெறுகிறார். முதலில் பொருளாதார சரிவு இருக்கும், பின்பு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பொருளாதாரத்தில் படிப்படியாக உயர்வார்கள். சில நேரங்களில் முக்கியமான செல்வத்தைத் தொலைக்கும் நிலை ஏற்படும். இவர்களுக்கு எந்த வயதிலும் காதல், ஆசை வரும், கண் பார்வையில் குறை, வசீகரத் தோற்றம், சினிமா/ கலைத் துறை மீது ஆசை, பல்வேறு நாட்டின் பாரம்பரிய உணவுகளை உன்ன விரும்புவார் மற்றும் தன்னை அழகும் கவர்ச்சியுடன் வைத்துக் கொள்வர். ரிஷபத்திற்கு சுக்கிரன் ஒன்றுக்கும் ஆறுக்கும் உரியவர், அதனால் அவர் நன்மையும் தீமையும் மாறி மாறி செய்வார். ரிஷபத்தில் பிறந்த ஒருவர் அவருக்கு அவரே எதிரியாகவும் பிரச்னையாகவும் இருப்பார், அதே சமயம் அதற்கான தீர்வை அவரே கண்டுபிடிப்பார். எடுத்துக்காட்டாக ஆடம்பர வீட்டிற்குக் கடன் கட்ட முடியாத நிலை, அளவுக்கு மீறிய உணவு அதனால் உடல் பாதிப்பு, பூர்வீக சொத்தின் ஆசை அதில் வில்லங்கம், அளவில்லா பணத்தால் தவறான பாதை மற்றும் களத்திரம்/ குழந்தைகள் பிரிவு. சுக்கிரன் அள்ளி கொடுக்கவும் செய்வார் அதோடு அதனால் வருத்தத்தையும் தருவார். ரிஷபத்தில் இருப்பவர்கள் ஒருசில நேரம் அம்பியாகவோ, அந்நியனாகவோ மாறும் குணம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

இந்த ராசியினருக்கு யார் நல்லவர் என்று தெரியாவண்ணம், தன்னை சுற்றி பகையாளியாக வைத்துக் கொள்வார். ரிஷபத்திற்கு புதன் நட்பு கிரகம், அவர் 2, 5க்கும் உரியவர், பேச்சில் தேனாகவும், ஆசிரியராகவும், ஞாபகசக்தி கொண்டவர், மற்றவர்களின் திறன் இவர்களின் செயலுக்கு உதவியாக இருக்கும். இவர்களுக்கு முதல் பகுதியில் தொழிலில் அல்லது பொருளாதாரத்தில் நஷ்டம் ஏற்படும். பின்பு பல்வேறு வழியில் லாபத்துடன் பணத்தைப் பெருக்குவர். புதன் என்பது மாமன் உறவு குறிக்கும். இந்த ராசிக்காரர்கள் மாமன் மீது பாசம் அதிகம் உண்டு. இவர்கள் சாத்வீக குணம் கொண்டவர், ஆனால் அதேசமயம் சரியான நேரத்தில், வெளியில் தெரியாமல் தங்களின் செயலில் வேகமுடன் கூடிய முரட்டுத் தன்மை வெளிப்படும்.

ரிஷபத்திற்கு சூரியன் 6ம் பாவத்தில் சுக்கிரன் வீடான துலாத்தில் நீச்சம், அதேசமயம் அயணம் என்று சொல்லுமிடத்தில் நெருப்பு கிரகமான செவ்வாய் வீட்டில் சூரியன் உச்சம். முக்கிய பாவமான அயணம் என்ற இடத்தில் நெருப்பு சார்ந்த தன்மை இருப்பது நல்லதல்ல. அது நிம்மதியான தூக்கத்தைக் குறைத்து விடும். இந்த பகை கிரகமான சூரியன் ரிஷபதிற்கு நான்காம் பாவமான சிம்மத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார். இந்த லக்கினக்கிறார்கள் தாயின் சுகம் மற்றும் அவரின் வழியில் தீராத துன்பத்தை அடையும் நிலை இருக்கும். சூரியனுடன் ராகு /கேதுவுடன் சேர்ந்தால், தந்தை உறவுகள் தடை மற்றும் மற்ற உறவினர்களும் இவருக்கு அவ பெயர்களை ஏற்படுத்துவார்கள். இவருக்கு செவ்வாய் 7க்கு 12க்கும் உரியவர். இவர் மருத்துவ ரீதியான செலவுகளை ஏற்படுத்துவார். இவர்கள் உண்ணும் உணவில் கவனம் தேவை. ரத்த சம்பந்த உறவுகளுக்கு, முக்கியமாக வீட்டில் ஒரு பெண்ணிற்கு உடல் ரீதியான பெரும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும்.

ரிஷபத்திற்கு 7 மற்றும் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம், அதுவே 3 மற்றும் கடக வீடான சந்திரன் வீட்டில் செவ்வாய் நீச்சம். இது களத்திரம், ரத்த சம்பந்தமான விஷயங்களைக் குறிக்கும் மற்றும் சூட்சும ரகசியங்களைச் சொல்லும் இடங்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த அளவு களத்திரம் அமையாது. கணவன் / மனைவி தங்கள் உறவில் விட்டுக்கொடுக்கும் பண்பு அவசியம் தேவை. சனி பகவான் இவருக்குப் பாதகாதிபதியாக இருந்தாலும் ஒரு சில யோகத்தையும் நன்றாகச் செய்வார். ஜாதகருக்கு கடின உழைப்பையும், சகிப்புத்தன்மையும், வேலையில் முன்னேற்றத்தையும், அதோடு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு செல்வ உயர்வையும் கட்டாயம் கொடுப்பார். இவரின் வீட்டில் உள்ளவருக்கோ உடலில் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு வேலை செய்யவே வீட்டில் ஒரு அடிமை சிக்கிவிடும்.

குரு இவருக்கு அதிக அவயோகத்தை தரவல்லவர். குரு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியாக செயல்படுவார். சனியை விட குருவும் சந்திரனும் மாரகத்திற்கு ஒப்பான கண்டதை ஏற்படுத்துவார். குரு சந்திரன் மற்றும் ராகுவுடன் அவயோகமாக செயல்படும். அதுவே சிலசமயம் இவர்களுக்கு மந்திரம், தாந்தீரகத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் மறைக்கப்பட்ட உண்மைகள் அதிகம் உண்டு. மேற்கூறியவை அனைத்தும் பொது பலன்கள். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை மற்றும் லக்னாதிபதி/ சாராதிபதியின் பலம் பலவீனம் பொறுத்து பலன்களும் மாறுபடும்.

ரிஷப லக்கினக்காரர்கள் வழிபடும் தெய்வம் நந்தீஸ்வரர், திருப்பதி பெருமாள் மற்றும் அவரவர் காவல் தெய்வங்கள் மற்றும் பௌர்ணமி காலத்தில் அம்பிகை வணங்குவது சிறந்தது. அபிராமி அந்தாதி மற்றும் லலிதா சகஸ்ர நாமத்தை அவ்வப்போது உச்சரித்தால் நன்று.

About the characteristics of Taurus..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய மோகினி... பிரியா வாரியர்!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ராபின் உத்தப்பாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!

SCROLL FOR NEXT