கன்னி ராசி 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: கன்னி

கன்னி ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை

சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் (வாக்கியப் பஞ்சாங்கப்படி).

கிரக மாற்றங்கள்

06.03.2026 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த ஆண்டு புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும். உங்களது உழைப்பினால் எந்த ஒரு கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த பழைய பகைகள் மாறும். பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும்.

பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தைச் செய்யும் முன்பும் அதை எப்படிச் செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் ஆலோசனை செய்து பின் முடிவெடுப்பது நன்மையைக் கொடுக்கும்.

அரசியல்துறையினருக்கு: கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளைக் கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. கல்வியில் இதுவரை இருந்த தடைகளைத் தகர்த்தெறிந்து புதிய திசையை நோக்கிச் செல்வீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்

இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அஸ்தம்

இந்த வருடம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.பணவரவு மனத்திருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்ப்படும்.

சித்திரை 1, 2, பாதங்கள்

இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளிலிருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பட்ட சிரமங்கள் குறையும்.

பரிகாரம்: குலதெய்வத்தைத் தீபம் ஏற்றி வணங்கச் செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன் - சனி - சுக்ரன்

எண்கள்: 5, 6, 8

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரடைப்பு... இதையெல்லாம் சாப்பிடக் கூடாது!

மொழியுரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்: உதயநிதி

இன்ஸமாம் உல் ஹக்கின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

2025-ல் அதிகம் வசூலித்த 30 திரைப்படங்கள்!

பிக் பாஸ் 9 : கனி வெளியேறிய நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் - விஜே பார்வதி

SCROLL FOR NEXT