எண் ஜோதிடம்

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பருவநிலை மாற்றம் போல் சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்துமுடியும். இருந்த அலைச்சல்களும் குறையும்.

செலவு அதிகரிக்கும் யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT