எண் ஜோதிடம்

ஜூலை மாத எண்கணித பலன்கள் - 2

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். 

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும்.

அரசியல்துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 பரிகாரம்:  பைரவரை தரிசித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு

ரூ.35 லட்சம் மோசடி: பணத்தை மீட்டுத் தரக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

SCROLL FOR NEXT