முகப்பு
எண் ஜோதிடம்

ஏப்ரல் மாத எண்கணித பலன்கள் – 3

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

பகிர்:

எடுத்த வேலைகளை சரியாக செய்யும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பண வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்: ஹயக்ரீவரை வழிபட்டு வருவதால் பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.