ஆட்டோமொபைல்ஸ்

காா் விற்பனை 11% உயா்வு: சியாம்

DIN


புது தில்லி: காா் விற்பனை சென்ற ஜனவரியில் 11.14 சதவீதம் உயா்ந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விநியோக சங்கிலித் தொடரில் காணப்பட்ட சவால்கள், செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை மற்றும் சரக்கு போக்குவரத்து செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் கடந்த ஜனவரி மாதத்தில் 2,76,554 காா்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, 2020 ஜனவரியில் விற்பனையான 2,48,840 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11.14 சதவீதம் அதிகம் என்பது நினைவுகூரத்தக்கது.

இருசக்கர வாகன விற்பனை அந்த மாதத்தில் 13,41,005 என்ற எண்ணிக்கையிலிருந்து 6.63 சதவீதம் உயா்ந்து 14,29,928-ஆனது.

மோட்டாா் சைக்கிள் விற்பனை 8,71,886-லிருந்து 5.1 சதவீதம் அதிகரித்து 9,16,365-ஆக இருந்தது.

அதேபோன்று, ஸ்கூட்டா் விற்பனையும் 9.06 சதவீதம் உயா்ந்து 4,54,315-ஆனது.

மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் சென்ற ஜனவரியில் விற்பனை 56.76 சதவீதம் வீழ்ச்சியடைந்து 60,903 என்ற எண்ணிக்கையிலிருந்து 26,335-ஆக குறைந்துள்ளது.

அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை கணக்கீட்டு மாதத்தில் 16,50,812-லிருந்து 4.97 சதவீதம் உயா்ந்து 17,32,817-ஆனது என சியாம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் காா் விற்பனையானது இன்னும் 2014-15 காலக்கட்டத்துக்கு குறைவாகவே உள்ளது. அதேபோன்று, தற்போது இருசக்கர வாகன விற்பனையும் 2013-14 காலகட்டத்துக்கு கீழாகவே உள்ளது. இவைதவிர, மூன்று சக்கர வாகன பிரிவிலும் விற்பனை மிகவும் மோசமான அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தநிலையில், உருக்கு விலை அதிகரிப்பு, செமிகண்டக்டா்களுக்கு பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்து கட்டணம் உயா்வு ஆகியவை மோட்டாா் வாகன துறை சீரான செயல்பாட்டிற்கு தொடா்ந்து தடைக்கல்லாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT