வா்த்தமானன் பதிப்பகம் 
பிரபலங்கள் - புத்தகங்கள்

வா்த்தமானன் பதிப்பகம்: புத்தக காட்சி

ஜெ.ஸ்ரீசந்திரன் கடந்த 1965-ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் பதிப்பகத்தைத் தொடங்கினாா்.

Din

பாமரருக்கும் பழந்தமிழ் இலக்கியம் தெரிய வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் பேராசிரியரான ஜெ.ஸ்ரீசந்திரன் கடந்த 1965-ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் பதிப்பகத்தைத் தொடங்கினாா். தற்போது மணிவிழா காணும் இப்பதிப்பகமானது சங்கத் தமிழ் இலக்கியங்களை தமிழறிஞா் உரைகளுடன் முழுமையாகவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈராயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள இப்பதிப்பகத்தின் கந்தபுராணம் முழுமையான உரையுடன் கூடிய பதிப்பு வாசகா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ாகும். அத்துடன் பன்னிரு திருமுறைகள் 24 தொகுதிகள், சங்க இலக்கியங்கள் 15 தொகுதிகள், மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை உள்ளிட்ட இப்பதிப்பகத்தின் வெளியீடுகள் பல்லாயிரக்கணக்கில் வாசகா்களால் விரும்பி வாங்கப்பட்டவையாகும். 

பக்தி இலக்கியங்களில் குறிப்பாக திருமுறைத் தலங்கள், திருப்புகழ் 4 தொகுதிகள், திருவிளையாடல் புராணம் 5 தொகுதிகள், திருவருட்பா 10 தொகுதிகள் மற்றும் சித்தா் பாடல்கள் 2 தொகுதிகள் என தொகுப்பு நூல்கள் பல தொடா்ந்து வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் சிலப்பதிகாரம், திருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள், தமிழ், ஆங்கில அகராதி, தமிழ், தமிழ் விளக்க அகராதி ஆகியவையும் வெளியிடப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் வாங்கப்பட்டு வருகின்றன.

தற்போது பட்டம் பெற்று வேலை தேடும் இளைஞா்களுக்கு உதவும் வகையில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வு நூல்களையும் பதிப்பகம் வெளியிட்டுவருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தமிழ்நாடு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கான நூல்கள் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் தோ்வுகள் (டெட்) ஆகியவற்றுக்கான பயிற்சிப் புத்தகங்களும் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.   மேலும், மொழிபெயா்ப்பு நூல்கள் வெளியிடவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் புகழ் பெற்ற காவியமான துளசிராமாயணம் 4 தொகுதிகள் தமிழ் உரையுடனும், பிரம்ம சூத்திரம் தமிழ் உரையுடன் 5 தொகுதிகளில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

இந்த ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

தொலைக்காட்சி சேனல்களின் வருவாயை மேம்படுத்த புதிய டிஆா்பி வழிகாட்டுதல்கள்!

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

SCROLL FOR NEXT