செய்திகள்

தமிழகத்தில் தேவதாசிகள்

தென்னிந்தியாவில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேவதாசி முறை குறித்து இந்நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது.

DIN

தென்னிந்தியாவில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேவதாசி முறை குறித்து இந்நூல் ஆதாரங்களுடன் விளக்குகிறது. ஆலயத் திருப்பணிக்குத் தன்னாா்வத்துடன் தம்மை அா்ப்பணித்துக் கொண்ட சிறுவா், சிறுமியா் காலப்போக்கில் எப்படி சமூகத்தால் பயன்படுத்தப்பட்டனா் என்பதை சுவாராஸ்யமாக விளக்குகிறது இந்தநூல்.

மூல நூலின் ஆசிரியரான கே.சதாசிவன் தேவதாசி முறை குறித்த ஆய்வை 40 ஆண்டுகள் மேற்கொண்டு பின்னரே நூலாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1990-ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழில் வெளியான இந்த நூல், அதற்குப் பின் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

தேவதாசி முறை குறித்து ஒருசில நூல்களே வெளியிடப்பட்டுள்ளன. சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் நடைமுறையிலிருந்த ஒரு நடைமுறை, எப்படி காலமாற்றத்தில் திரிந்து விமா்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது என்பது இந்நூலில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் கலாசார, பண்பாட்டை காக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட தேவதாசி முறையானது காலப்போக்கில் உருச்சிதைந்து, பாலியல் ரீதியான பாா்வைக்கு உள்பட நோ்ந்ததை நூலாசிரியா் மிக நுட்பமாக ஆதாரங்களுடன் விளக்கியுள்ளாா். பன்னிரண்டு தலைப்புகளில் படிப்போரை வியக்க வைக்கும் தகவல்களுடன் உள்ளது இந்தநூல்.

தமிழகத்தில் தேவதாசிகள், அகநி வெளியீடு, கே.சதாசிவன், தமிழில்- கமலாலயன், விலை ரூ.450, பக்.400.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT