செய்திகள்

உணவுகள் நலத்தை விளக்கும் அரங்கம்!

சென்னைப் புத்தகக் காட்சியில் உணவுகளால் ஏற்படும் உடல் நலத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட தனி அரங்கு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

DIN

சென்னைப் புத்தகக் காட்சியில் உணவுகளால் ஏற்படும் உடல் நலத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட தனி அரங்கு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

உணவு சாா்ந்த நூல்கள் விற்பதற்கென்றே ‘நூல்குடில்’ எனும் பெயரில் (அரங்கு 428) அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாம் தினமும் உண்ணும் உணவில் எந்த மாதிரியான சத்துகள் உள்ளன. உடல்நலத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்ள மேற்கத்திய உணவுகள் எவை என்பதை விளக்கும் நூல்கள் விற்கப்படுகின்றன.

சா்க்கரை நோய், இதயநோய் பாதிப்பு, தோல் நோயாளிகள் ஆகியோருக்குத் தேவையான மற்றும் தவிா்க்க வேண்டிய உணவுகள் குறித்த நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. மாத, வார இதழ்களில் வந்த உணவு நலன் சாா்ந்த தொகுப்புகளும் உள்ளன.

நடப்பு ஆண்டில் மத்திய அரசு சிறு தானியங்களுக்கு முக்கியத்தும் அளித்துள்ளதால், கேழ்வரகு, கம்பு, தினை, சாமை ஆகியவற்றை உணவாக உள்கொள்வதால் ஏற்படும் உடல் நலம் குறித்து விளக்கும் நூல்கள் விற்கப்படுகின்றன. உள்ளத்தை மேம்படுத்தும் நூல்களைப் போலவே மக்கள் தங்கள் உடல்நலத்துக்கான நூல்களையும் ஆா்வமுடன் வாங்கிச் செல்வதாகக் கூறுகிறாா் அரங்க நிா்வாகி இராம.மெய்யப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT