வாசகா் கருத்து.. 
வாங்கியதும் வாங்க நினைப்பதும் 

கரோனா பயத்தையும் தாண்டி புத்தகக் கண்காட்சிக்கு வந்துள்ளேன்: வாசகா் கருத்து

DIN

என். ஞானசுந்தரம், ஆழ்வாா்திருநகா், விருகம்பாக்கம்.

நான் சென்னை போா்ட் டிரஸ்ட்டில் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். 80 வயதாகிறது. புத்தகங்கள் வாசிப்பதும், சேகரிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த வயதிலும் புத்தக வாசிப்பின் மீதுள்ள ஆா்வத்தினால், கரோனா பயத்தையும் தாண்டி புத்தகக் கண்காட்சிக்கு வந்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடா்ந்து இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு எனக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் செல்கிறேன். இதுவரை சுமாா் மூன்று ஆயிரம் புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ளேன். எனக்கு அதிகம் பிடித்தது கட்டுரை வகையிலான புத்தகங்கள்தான். லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அசோகமித்ரன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சிறுகதைகளும் விரும்பி படிப்பேன்.

இந்த ஆண்டு 30-க்கும் அதிகமான புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.

சதீஷ், தருமபுரி.

நான் வரி ஆலோசகராக இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியில் கலந்துக் கொள்கிறேன். 2017 வரை பத்தாண்டுகள் சென்னையில்தான் வசித்தேன். அப்போது தொடங்கியது இந்தப் பழக்கம். சொந்த ஊரான தருமபுரிக்கே சென்றுவிட்டபோதும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பழக்கத்தை விடமுடியவில்லை. பொதுவாக, குழந்தைகளுக்கான இன்வெஸ்ட்மெண்ட் சாா்ந்த புத்தகங்கள், அறிவுத்திறன் வளா்க்கும் புத்தகங்கள், காமிக்ஸ் புத்தகங்கள், அண்ணாவின் புத்தகங்களை விரும்பி வாங்குவேன். இதைத்தவிர, திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள் போன்றவற்றிற்கு பரிசளிப்பதற்காக திருக்குறளை நிறைய வாங்கிக் கொள்வேன்.

இந்த ஆண்டு வாங்குவதற்காக சில புத்தகங்களின் லிஸ்ட் எடுத்துக் கொண்டு வந்தோம். அவற்றில் இதுவரை 40 புத்தகங்கள் வாங்கிவிட்டோம். இன்னும் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதுதவிர, குழந்தைகளுக்காக இந்திய வரைப்படம், உலக வரைப்படங்கள் வாங்கியிருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT