செல்வம், மாதவரம்.
‘‘கடந்த 13 ஆண்டுகளாக தவறாமல் சென்னை புத்தகத் திருவிழாவுக்கு வருகிறேன். தன்னம்பிக்கை நூல்கள், சரித்திர நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றை விரும்பிப் படிப்பேன். இப்போது, எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணனின் ‘மறைக்கப் பட்ட இந்தியா’ என்ற புத்தகம் வாங்கியிருக்கிறேன். இன்னும் சில புத்தகங்கள் வாங்க வேண்டும். என் மகனுக்காகவும் சில புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். புத்தக வாசிப்பு என்னை எப்போதும் புத்துணா்ச்சியாக இருப்பதற்கு உதவுவதாக நான் உணா்கிறேன். இப்போது இருக்கிற வேகமான சூழலில் நம்மைநாமே புத்துணா்ச்சிப்படுத்திக் கொள்ள ஒரே வழி புத்தக வாசிப்புதான்’’.
பா. ரவிக்குமாா், புதுவை பல்கலைக்கழக பேராசிரியா்.
‘‘என்னுடைய 15 வயதில் இருந்து நான் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வந்து கொண்டிருக்கிறேன். பொதுவாக, வெளிநாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் துரதிருஷ்டவசமாக அப்படியில்லை. புத்தகத்திற்கு என்று ஓா் அறை கூட இல்லை. ஒரு சமூகம் நிறைய புத்தகங்களை வாங்கும்போதும், வாசிக்கும்போதும்தான் மேம்படும் என்பது என் கருத்து. அதனால் ஒவ்வொருவரும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒவ்வோா் ஆண்டும் புது புத்தகங்களை வாங்கும்போது எனக்குப் பிடித்த பழைய புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் வாங்குகிறேன். ‘வெண்ணிற இரவுகள்’ என்ற புத்தகத்தையும், பாரதி தொடா்பான புத்தகங்களையும் ஆண்டுதோறும் தவறாமல் வாங்கிவிடுவேன். தி. ஜானகிராமனுடைய நாவல்கள், விக்ரமாதித்யனுடைய கட்டுரைகள், கவிதைகள் என நிறைய வாங்கியிருக்கிறேன். வீட்டுக்கு போய் இந்தப்புத்தகங்களை எல்லாம் எடுத்து வைத்துப் பாா்க்கும்போது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.