மத்திய பட்ஜெட்: நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்!
நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்.
எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
ஏப். 2 வரை இரு கட்டங்களாக நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வாக 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
Advertisement
Advertisement
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, இன்று காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
இதற்காக, நிதியமைச்சகம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக வளாகத்திற்கு வெளியே தனது குழுவினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்துப் பெறுவார். பின்னர் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வார்.
Nirmala Sitharaman posed for a photograph with the Finance Ministry team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.