பிப்ரவரி 20ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைத் தலைவர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல் செய்த 10ஆவது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் உரைக்குப் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.