வர்த்தகம்

பயணிகள் வாகன விற்பனை 14.29 சதவீதம் வளர்ச்சி

DIN

சலுகை அறிவிப்புகளால் சென்ற நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 14.29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்துர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு அறிவிப்பால் வாகன விற்பனை குறைந்து போனது. ஆனால், நடப்பு 2017ஆம் ஆண்டு நவம்பரில் வாகன விற்பனை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, பண்டிகை காலத்தை முன்னிட்டு நிறுவனங்கள் தாராள தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டதே முக்கியக் காரணமாகும்.
கடந்த நவம்பரில் 2,75,417 பயணிகள் வாகனம் விற்பனையாகியது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 2,40,983 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 14.29 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக, கார் விற்பனை 1,73,607லிருந்து 4.49 சதவீதம் அதிகரித்து 1,81,395ஆனது.
இருசக்கர வாகன விற்பனை 12,43,246 என்ற எண்ணிக்கையிலிருந்து 23.49 சதவீதம் அதிகரித்து 15,35,277ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 23.25 சதவீதம் வளர்ச்சி கண்டு 9,59,122ஆனது. ஸ்கூட்டர் பிரிவில் விற்பனை 3,88,692லிருந்து 30.25 சதவீதம் உயர்ந்து 5,06,267ஆனது.
அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கான மத்திய அரசின் செலவினம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தேவை சூடுபிடித்தது. இதையடுத்து, வர்த்தக வாகனங்கள் விற்பனை 50.43 சதவீதம் அதிகரித்து 68,846ஆக இருந்தது. இருப்பினும், அரசின் பேருந்து கொள்முதல் நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்பட்டதால் அப்பிரிவிலான விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அனைத்து பிரிவிலான மோட்டார் வாகனங்களின் விற்பனை 15,63,658 என்ற எண்ணிக்கையிலிருந்து 24.05 சதவீதம் அதிகரித்து 19,39,671ஆனது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் மோட்டார் வாகன விற்பனை 9.29 சதவீதம் அதிகரித்தது. 
நடப்பு நிதி ஆண்டில் மோட்டார் வாகன துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 8-10 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இலக்கு எட்டப்படும் பட்சத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சிறப்பான வளர்ச்சியாக இருக்கும் என்றார்அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT