வர்த்தகம்

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

DIN

பி.பி.எஃப்., கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அந்த திட்டங்களுக்கு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்களே தொடரும்.
அதன்படி, பிபிஎஃப் மற்றும் 5 ஆண்டு தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 8 சதவீதமாகவும், கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி 7.7 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா ஸம்ருத்தி மற்றும் முதியோர் 5-ஆண்டு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி தலா 8.5 சதவீதமாகவும் தொடரும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT