வர்த்தகம்

சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிவு

DIN

சாதகமற்ற உள்நாட்டு நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்தது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு உள்நாட்டில் பணத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பும் சந்தை வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
எண்ணெய்-எரிவாயு துறை பங்குகளின் விலை 0.93 சதவீதமும், மருந்து துறை பங்கின் விலை 0.81 சதவீதமும் குறைந்தன.
இவைதவிர, எரிசக்தி, மின்சாரம், தொலைத் தொடர்பு, உலோகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
அதேசமயம், ரியல் எஸ்டேட் துறை பங்கின் விலை 0.62 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப பங்கின் விலை 0.59 சதவீதமும் உயர்ந்தன. நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை 3 சதவீதமும், ஓ.என்.ஜி.சி. பங்கின் விலை 2.17 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்கின் விலை 1.88 சதவீதமும் வீழ்ச்சி கண்டன.
இவை தவிர, கோல் இந்தியா (1.86%), லூபின் (1.40%), மஹிந்திரா & மஹிந்திரா (1.38%), கெயில் (1.37%), பவர் கிரிட் (1.32%), ஸன் ஃபார்மா (1.26%) பங்குகளின் விலையும் கணிசமான இறக்கத்தை சந்தித்தன.
அதேசமயம், ஐ.டி.சி. பங்கின் விலை 1.30 சதவீதமும், டி.சி.எஸ். 0.88 சதவீதமும், மாருதி 0.62 சதவீதமும், விப்ரோ 0.59 சதவீதமும், டாடா ஸ்டீல் 0.56 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 0.51 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்து 26,726 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 7.75 புள்ளிகள் குறைந்து 8,236 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT