வர்த்தகம்

டாடா ஸ்டீல்: உருக்கு உற்பத்தி 32 லட்சம் டன்

DIN

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு உருக்கு உற்பத்தி 32 லட்சம் டன்னாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஒடிஸா மாநிலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான உள்ள காலிங்கநகர் ஆலையின் உருக்கு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. கடந்த மே மாதம் அந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, அதன் உற்பத்தி திறன் 25 லட்சம் டன்னை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில் டாடா ஸ்டீல் உருக்கு உற்பத்தி 32 லட்சம் டன்னை எட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு உருக்கு உற்பத்தியான 25 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம். மேலும், உருக்கு விற்பனை 23 லட்சம் டன்னிலிருந்து அதிகரித்து 30 லட்சம் டன்னாக இருந்தது என்று டாடா ஸ்டீல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT