வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.7,506 கோடி

DIN

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 7,506 கோடி ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தைக்கு அந்நிறுவனம் அளித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 84,189 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் பெற்ற வருவாயைவிட இது 16 சதவீதம் கூடுதலாகும். நிகர லாபம் கடந்த ஆண்டு நிலையைவிட 3.6 சதவீதம் வளர்ச்சி பெற்று, ரூ. 7,506 கோடியை நிறுவனம் ஈட்டியது.
ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டைவிட 47 சதவீதம் அதிகரித்து ரூ. 8,688 கோடியாக இருந்தது. வரி, வட்டிக்கு முந்தைய லாபம் 40 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 333 கோடியாக இருந்தது. மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் கீழ் 111 புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 686 நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், ரிலையன்ஸ் சூப்பர், ரிலையன்ஸ் ஹைப்பர், ரிலையன்ஸ் டிஜிட்டல், டிரெண்ட்ஸ் உள்ளிட்ட அங்காடிகளின் மொத்த எண்ணிக்கை 3,533 ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT