வர்த்தகம்

எஸ்.பி.ஐ.யில் ரூ.1,894 கோடி கூடுதல் மூலதனம்

DIN

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கூடுதல் மூலதனமாக ரூ. 1,894 கோடி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுத்துள்ள முடிவின்படி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 7,575 கோடி கூடுதல் மூலதனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் 75 சதவீதத் தொகையான ரூ. 5,681 கோடி ஏற்கெனவே வங்கிக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இதையொட்டி மத்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்கு வெளியிட வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.
தற்போது ரூ. 1,894 கோடி கூடுதல் மூலதனத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கு ஈடாக அரசுக்கு பங்குகள் அளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை அந்த வங்கி எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட நடப்பு நிதி ஆண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த 13 வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ. 22,915 கோடி செலுத்த கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT