வர்த்தகம்

யமஹா: 10 லட்சம் வாகனங்களை விற்க இலக்கு

DIN


ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம், இந்தியாவில் நடப்பு ஆண்டில் 10 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் "எப்.இசட். 25' 250சிசி மோட்டார் சைக்கிள் அறிமுக விழா புது தில்லியில் நடைபெற்றது. இதன் தில்லி விற்பனையக விலை ரூ.1.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யமஹா மோட்டார் இந்தியாவின் (விற்பனை) நிர்வாக இயக்குநர் மசாகி அஸானோ தெரிவித்ததாவது: யமஹா நிறுவனத்துக்கு உலக அளவில் இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்கிறது.
இந்தோனேசியாவில் 14.50 லட்சம் மோட்டார் சைக்கிள்களும், வியத்நாமில் 8 லட்சம் மோட்டார் சைக்கிள்களும் கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் விற்பனை 7.86 லட்சமாக இருந்தது. 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை இந்தியாவில் 32 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதில் 6 லட்சம் ஸ்கூட்டர்கள் மற்றும் 4 லட்சம் மோட்டார் சைக்கிள்களும் அடங்கும்.
"எப்.இசட். 25' மாடலில் 8,000 முதல் 9,000 வரையிலான மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தவிர, ஆர்-15 வகை மோட்டார் சைக்கிள் விற்பனையை மாதத்துக்கு 3,500-ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகன ஏற்றுமதியை 2 லட்சமாக அதிகரிக்க உள்ளோம். கடந்த ஆண்டில் இதன் ஏற்றுமதி 1.90 லட்சமாக இருந்தது.
நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், கொலம்பியா, ஆர்ஜென்டீனா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுக்கும் அதிக அளவில் வாகன ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறோம். பொருளாதார மந்த நிலையால் சில நாடுகளில் வாகனங்களுக்கான தேவை மிதமான அளவிலேயே உள்ளது.
உயர் மதிப்பு கரன்ஸி வாபஸ் பிரச்னையால் முதலில் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு விட்டோம். கரன்ஸி வாபஸ் பிரச்னையின் தாக்கம் தாற்காலிகமானதே. இம்மாத இறுதியில் விற்பனை சகஜ நிலைக்குத் திரும்பிவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா எங்களுக்கு முதன்மையான சந்தையாக உருவெடுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT