வர்த்தகம்

பஜாஜ் ஃபைனான்ஸ் லாபம் 36% அதிகரிப்பு

DIN

பஜாஜ் ஃபைனான்ஸ் மூன்றாம் காலாண்டு லாபம் 36 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,729.08 கோடியாக இருந்தது. கடந்த 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.2,069.62 கோடியாக காணப்பட்டது. நிகர வட்டி வருவாய் ரூ.1,320 கோடியிலிருந்து 33 சதவீதம் அதிகரித்து ரூ.1,749 கோடியாக காணப்பட்டது. இதையடுத்து, நிகர லாபம் ரூ.408.46 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.555.65 கோடியாக இருந்தது.
கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.43,452 கோடியிலிருந்து 33 சதவீதம் அதிகரித்து ரூ.57,605 கோடியாக இருந்தது என பஜாஜ் ஃபைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT