வர்த்தகம்

ஹீரோவை விஞ்சிய டி.வி.எஸ்.

DIN

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இரண்டாமிடத்திலிருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. முதலிடத்தை எப்போதும் போல் ஹோண்டா தக்க வைத்துக் கொண்டது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால அளவில் டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகன விற்பனை 7,43,838-ஆக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 7,07,884 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 5.07 சதவீத வளர்ச்சியாகும்.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 7,31,967-லிருந்து 1.64 சதவீதம் சரிவடைந்து 7,19,987-ஆக காணப்பட்டது.
இந்தியாவில் முதலிடத்தில் உள்ள ஹோண்டாவின் வாகன விற்பனை 25,44,872 என்ற எண்ணிக்கையிலிருந்து 15.32 சதவீதம் அதிகரித்து 29,34,794-ஆக இருந்தது. சென்ற பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை 2,17,098-ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து டி.வி.எஸ். ஜுபிடர் விற்பனை 51,817-ஆகவும், ஹீரோ மேஸ்ட்ரோ விற்பனை 32,421-ஆகவும் இருந்தது.
ஸ்கூட்டர் விற்பனையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே யமஹா மற்றும் சுஸூகி நிறுவனங்கள் பிடித்துள்ளன என்கிறது இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT