வர்த்தகம்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லாபம் ரூ.479 கோடி

DIN

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.479 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் இரண்டாவது காலாண்டில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் ரூ.2,979.92 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,713.59 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.8 சதவீதம் அதிகமாகும்.
நிகர வட்டி வருமானம் 1,352.99 கோடியிலிருந்து 20.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,632.37 கோடியானது. நிகர லாபம் ரூ.387.65 கோடியிலிருந்து 23.6 சதவீதம் உயர்ந்து ரூ.479.11 கோடியாக இருந்தது.இரண்டாவது காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 6.58 சதவீதத்திலிருந்து அதிகரித்து 8.06 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 2.04 சதவீதத்திலிருந்து உயர்ந்து 2.45 சதவீதமாகவும் இருந்தது என்று ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்குகளாக மாற்ற இயலாத மீட்கக்கூடிய வகையிலான கடன்பத்திர வெளியீட்டுக்கு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம், விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை ரூ.30,000 கோடிக்கு மிகாமல் அந்த நிறுவனம் திரட்டிக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT