வர்த்தகம்

சிறப்பு பொருளாதார மண்டல ஏற்றுமதி ரூ.1.35 லட்சம் கோடி

DIN

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின்( எஸ்இஇசட்) ஏற்றுமதி ரூ.1.35 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலிருந்து ரூ.1.35 லட்சம் கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவுடன் ஒப்பிடும்போது இது 15.4 சதவீத வளர்ச்சியாகும்.
நடப்பு ஆண்டில் ஜூன் வரையிலான கால அளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ரூ.4.33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. செப்டம்பர் 7 வரையில் 424 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் தற்போது 222 மண்டலங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 2015-16 நிதி ஆண்டில் ரூ.4.67 லட்சம் கோடியாக இருந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி 2016-17-இல் ரூ.5.24 லட்சம் கோடியாக அதிகரித்தது.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இந்த மண்டலங்களின் பங்களிப்பு 33 சதவீதமாக உள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டல ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ராகுல் குப்தா தெரிவித்ததாவது:
எஸ்இஇசட் வாயிலான ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. 
இருப்பினும், இந்த மண்டலங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
சரக்கு மற்றும் சேவை வரியை பொருத்தமட்டில் அது சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுகூலம் தரக் கூடியதாகவே உள்ளது. 
மண்டலங்களுக்கு வெளியே பொருள்களை வாங்கும் நிறுவனங்களுக்கு வரியை திரும்ப அளிப்பதற்கான நடைமுறையில் மத்திய அரசு சரியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT