வர்த்தகம்

சிபிசிஎல் நிறுவனத்தை இணைக்கும் திட்டத்தை கைவிட்டது ஐஓசி

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அதன் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (சிபிசிஎல்) தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
இதுகுறித்து ஐஓசி நிறுவனத்தின் உயரதிகாரி கூறியதாவது:
சிபிசிஎல் நிறுவனத்தில் ஐஓசி 51.89 சதவீத பங்குகளை வைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தனது துணை நிறுவனமான போங்காய்கான் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் (பிஆர்பிஎல்) நிறுவனத்தை இணைத்துக் கொண்டதைப் போல, சிபிசிஎல் நிறுவனத்தையும் தன்னுடன் இணைக்க ஐஓசி திட்டமிட்டது.
ஆனால், பிஆர்பிஎல் நிறுவனத்தைப் போலல்லாமல், சிபிசிஎல் நிறுவனத்தில் நேஷனல் ஈரானியன் ஆயில் கார்ப்பரேஷன் (என்ஐஓசி)15.40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
சிபிசிஎல் நிறுவனம் ஐஓசியுடன் இணைக்கப்படும் நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களில் என்ஐஓசி முதலீடு மேற்கொள்ளாது என்பது ஐஓசியின் நம்பிக்கை. மேலும், சிபிசிஎல் நிறுவனத்தை விட்டு என்ஐஓசி வெளியேறவும் வாய்ப்பு ஏற்படும்.
ஏற்கெனவே சிபிசிஎல் நிறுவனத்தின் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரூ.27,460 கோடி மதிப்பிலான விரிவாக்க திட்டத்தில் என்ஐஓசியும் பங்கேற்க முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிபிசிஎல் நிறுவனத்தில் ஈரானிய நிறுவனம் தொடர்ந்து முதலீட்டை தக்கவைக்கவே விரும்புகிறது.
இதையடுத்தே, இந்த இணைப்புத் திட்டத்தை ஐஓசி நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT