வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,193 கோடி

DIN

பஜாஜ் ஆட்டோ இரண்டாம் காலாண்டில் ரூ.1,193.58 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ.6,863.61 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,775.03 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.1,200.72 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.1,193.58 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ 10,71,510 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு விற்பனையான 10,31,945 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகமாகும் என பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT