வர்த்தகம்

பொதுப் பங்கு வெளியீடு: ஐ.ஆர்.டி.ஏ.ஐ. அனுமதியைப் பெற்றது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்

DIN

பொதுக் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான முதல் கட்ட அனுமதியை காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.) செவ்வாய்க்கிழமை வழங்கியது.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் கேபிடலின் 100 சதவீத துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் கேபிடல் கொண்டுள்ள 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பொதுப் பங்கு வெளியீடு நடப்பு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதியை தற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், தீ, மோட்டார், மருத்துவம், வீடு, பயிர், பயணம் உள்ளிட்டவற்றுக்கான பொதுக் காப்பீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 2016-17 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 41 சதவீத வர்த்தக வளர்ச்சியை எட்டியுள்ளது.
சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த நேரடி பிரீமியம் ரூ.3,935 கோடியாக இருந்தது. வரிக்கு முந்தைய லாபம் 32 சதவீதம் அதிகரித்து ரூ.130 கோடியாக காணப்பட்டது.
பிரதமரின் ஃபஸல் பீமா யோஜனா உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு பயிர் காப்பீட்டு திட்டங்களில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 30 லட்சம் விவசாயிகளுக்கு இதுபோன்ற பயிர் காப்பீட்டு திட்டங்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. 
ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT